என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாடா எலெக்ட்ரிக் கார்"

    • முதன்முறையாக இந்திய மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்தது.
    • இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.

    இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலக கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.

    விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டாடா சியாரா கார், மகளிர் உலக கோப்பை வென்ற ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளுக்கு பரிசாக வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • 8 ஆண்டு அல்லது 1.6 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை வாரண்டி வழங்கப்பட்டிருந்தது.
    • டாடா இ.வி. வைத்திருப்போர் புதிய நெக்சான் இ.வி. 45 அல்லது கர்வ் இ.வி. வாங்கினால் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி சலுகை உண்டு.

    டாடா நிறுவனம் நெக்சான் 45 மற்றும் கர்வ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்தியுள்ளது. தற்போது இவற்றின் பேட்டரிகளுக்கு 15 ஆண்டு அல்லது வரம்பற்ற கிலோ மீட்டர்கள் வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. வாழ்நாள் கால வாரண்டி என்பது வாகனம் பதிவு செய்யப்பட்டதில் இருந்து 15 ஆண்டுகள் என கணக்கில் கொள்ளப்படும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு முன்பு 8 ஆண்டு அல்லது 1.6 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை வாரண்டி வழங்கப்பட்டிருந்தது. புதிதாக டாடா இ.வி. வாங்குவோருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இது தவிர, லாயல்டி போனசாக டாடா இ.வி. வைத்திருப்போர் புதிய நெக்சான் இ.வி. 45 அல்லது கர்வ் இ.வி. வாங்கினால் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி சலுகை உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது. தொடக்க ஷோரூம் விலையாக டாடா கர்வ் சுமார் ரூ.17.49 லட்சம் எனவும், நெக்சான் இ.வி. சுமார் ரூ.12.49 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • இந்த எலெக்ட்ரிக் காரில் 65kWh மற்றும் 75kWh பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன.
    • ஹாரியர் EVயின் RWD 75kWh பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 627 கிமீ வரை பயணிக்க முடியும்.

    இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

    டாடா ஹாரியர் EV கார் இந்தியாவில் ரூ.21.49 லட்சம் ரூபாய்க்கு (எக்ஸ் ஷோ ரூம் விலை) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த எலெக்ட்ரிக் காரில் 65kWh மற்றும் 75kWh பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த பேட்டரியின் மூலம் அதிகபட்சமாக 396hp பவரையும் மற்றும் 504Nm டார்க் சக்தியையும் வெளிப்படுத்தும்

    எம்பவர்டு ஆக்சைடு, நைனிடால் நாக்டர்ன், பிரிஸ்டைன் ஒயிட் மற்றும் ப்யூர் கிரே ஆகிய 4 வண்ணங்களில் இந்த மாடல் சந்தியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஹாரியர் EVயின் RWD 75kWh பேட்டரியில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 627 கிமீ வரை பயணிக்க முடியும். 7.2kW AC சார்ஜர் மூலம் ஹாரியர் EVயை 10.7 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

    இந்த மாடல் 0-100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த மின்சார காருக்கான முன்பதிவு ஜூலை 2 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டாடா ஹேரியர் EV டீசல் வெர்ஷனில் இருந்து உட்புற கூறுகளை பெறுகிறது.
    • டாடா ஹேரியர் EV-யின் பேட்டரி மற்றும் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

    இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டாடா, இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் வாகன பிரிவை பன்முகப்படுத்த தயாராகி வருகிறது. டாடா கர்வ் எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம், இந்த நிறுவனம் இப்போது மற்ற எலெக்ட்ரிக் வாகனங்களில் கவனம் செலுத்துகிறது. அதன்படி, டாடா நிறுவனம் தற்போது ஹேரியர் எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஹேரியர் எலெக்ட்ரிக் மாடல் ஜூன் 3, 2025 வெளியாக இருக்கிறது.

    டாடா ஹேரியர் EV: வெளிப்புற புதுப்பிப்புகள்

    டாடா ஹேரியர் EV, அதன் ICE பதிப்பின் பெரும்பாலான வெளிப்புற வடிவமைப்பு மற்றும் கூறுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், மூடிய-ஆஃப் கிரில், குரோம்-டிரிம் செய்யப்பட்ட ஏர் டேம், சில்வர் நிற கிளாடிங், முன் கதவுகளில் "EV" பேட்ஜ், டெயில்கேட்டில் "HARRIER.EV" பேட்ஜ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பம்பர் வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

    இத்துடன் செங்குத்தான LED ஹெட்லேம்ப்கள், பிளேடு வடிவ DRLகள், கருப்பு நிற D-பில்லர், ப்ளோட்டிங் ரூஃப், பின்புற பம்பரில் ஒருங்கிணைக்கப்பட்ட செங்குத்தாக அடுக்கப்பட்ட LED ஃபாக் லேம்ப் மற்றும் பலவற்றை கொண்டுள்ளது.



    டாடா ஹேரியர் EV: உட்புற புதுப்பிப்புகள்

    டாடா ஹேரியர் EV டீசல் வெர்ஷனில் இருந்து உட்புற கூறுகளை பெறுகிறது. இது 12.3-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டூயல் டோன் டேஷ்போர்டு, 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, JBL-இன் 10-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், டச் அடிப்படையிலான HVAC மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது.

    டாடா ஹேரியர் EV: பேட்டரி மற்றும் பவர்டிரெய்ன்

    டாடா ஹேரியர் EV-யின் பேட்டரி மற்றும் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், பின்புற அச்சில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாரின் இணைப்பின் காரணமாக இது AWD அமைப்பைப் பெறும் என்று தெரிகிறது. மேலும், இது கர்வ் EV-ஐ விட பெரிய பேட்டரியை பெறும் என்றும் 500 Nm டார்க்கை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
    • எலெக்ட்ரிக் கர்வ் மாடலை பத்து நிமிடங்களுக்குள் 100 கிலோமீட்டர்கள் வரை செல்வதற்கான சார்ஜ்-ஐ ஏற்றிவிடும்.

    வருகிற 7-ந்தேதி டாடா கர்வ் EV அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக இந்த காரின் விவரங்கள் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து அடுத்த மாத இறுதியில் ஐசி எஞ்சின் மாடலின் விலை அறிவிப்பு வெளியிடப்படும்.

    கர்வ் EV தேர்வு செய்ய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வரும். டாப் எண்ட் வெர்ஷனில் 55kWh பேட்டரி ஒற்றை மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வெர்ஷன் ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் தூரம் வரை செல்லும்.


    குறிப்பிடத்தக்க வகையில், DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது எலெக்ட்ரிக் கர்வ் மாடலை பத்து நிமிடங்களுக்குள் 100 கிலோமீட்டர்கள் வரை செல்வதற்கான சார்ஜ்-ஐ ஏற்றிவிடும்.

    அம்சங்கள் பிரிவில், டாடா கர்வ் EV ஆனது பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS சூட், 360-டிகிரி கேமரா, வென்டிலேட் செய்யப்பட்ட முன் இருக்கைகளை கொண்டிருக்கும்.

    புதிய கர்வ் எலெக்ட்ரிக் மாடல் விலை ரூ.18 முதல் 24 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கர்வ் EV ஆனது பிஓய்டி அட்டோ 3, எம்ஜி ZS EV, மஹிந்திரா XUV400 மற்றும் வரவிருக்கும் கார்களான ஹூண்டாய் க்ரெட்டா EV மற்றும் ஹோண்டா எலிவேட் EV ஆகியவற்றுக்கு போட்டியாக அமையும்.

    • 2024 கர்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வரும்.
    • காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என டாடா நிறுவனம் கூறுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி தனது புது எலெக்ட்ரிக் கார் டாடா கர்வ் EV-யை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. டாடா கர்வ் EV பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

    புதிய கர்வ் EV ஆனது பனோரமிக் சன்ரூஃப் கொண்டிருக்கும். இந்த சன்ரூஃபின் டபுள் பேனல் உட்புறப் பிரிவின் இருபுறமும் சுற்றுப்புற விளக்குகளை கொண்டிருக்கிறது.

    இத்துடன் 4-ஸ்போக் டூயல்-டோன் ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள், கருப்பு மற்றும் பழுப்பு நிற உட்புற தீம், ஏசி செயல்பாடுகளுக்கான தொடுதிரை கட்டுப்பாடுகள், குரோம் கதவு கைப்பிடிகள் மற்றும் ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் ஆகியவை கொண்டுள்ளது.

    இதுதவிர கர்வ் எலெ்க்ட்ரிக் மாடலில் LED விளக்குகள், டூயல்-டோன் அலாய் வீல்கள், சாய்வான கூரை, LED லைட் பார்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், லெவல் 2 ADAS, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புதிய 12.3-இன்ச் தொடுதிரை போன்ற அம்சங்களைப் பெறுகிறது. மேலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    2024 கர்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வரும். ஒன்று 40.5kWh யூனிட்டாகவும் மற்றொன்று 55kWh யூனிட்டாகவும் இருக்கும். இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என டாடா நிறுவனம் கூறுகிறது.

    • பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் இரட்டை வெண்கல பதக்கம் வென்றார்.
    • மனு பாக்கருக்கு, Tata Curvv EV எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தனிநபர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார் .

    இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதலில் இரட்டைப் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கருக்கு, Tata Curvv EV எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

    இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    ×